பௌத்த தேரர்களுக்கு சுகாதார காப்புறுதிக்கு 900 மில்லியன் ரூபா நிதி
பௌத்த தேரர்களுக்காக புத்த சாசன அமைச்சினால் காப்புறுதி திட்டம் ஒன்று இம்மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
தேரர்களின் சுகாதார காப்புறுதிக்கு முக்கியத்துவம் வழங்கி இந்த காப்புறுதி திட்டம் தயாரிக்கபட்டிருப்பதாக புத்த சாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமின ஜெயவிக்ரம பெரேரா தெரிவித்தார். இதன் கீழ் நாடு முழுவதிலும் உள்ள 15 000 தேரர்கள் நன்மை அடைய இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
பௌத்த சாசன அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் அமைச்சர் உரையாற்றுகையில் இந்த காப்புறுதி திட்டத்திற்காக 900 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டடுள்ளது. பௌத்த சாசன அறக்கட்டளையில் இருந்து 500 மில்லியன் ரூபா வழங்கப்படுகிறது.
திறைச்சேரியில் இருந்து 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். சுலக்ஷா காப்புறுதியை கொண்டுள்ள பிரிவெனா கல்வியை பெறும் தேரர்களுக்கும் அரச சேவையில் ஈடுபட்டுள்ள தேரர்களுக்கும் இந்த தேரர்களுக்கான காப்புறுதி உரித்தாகாது என்றும் அமைச்சர் கூறினார்.