பொதுக் கடன் 80% ஆக அதிகரிக்கும் – ஜேர்மன் நிதி அமைச்சர்
கொரோனா வைரஸ் நெருக்கடியின் முடிவில் ஜேர்மனியின் பொருளாதார உற்பத்தியில் பொதுக் கடன் 80% ஐ எட்டும் என எதிர்பார்ப்பதாக நிதியமைச்சர் ஓலாஃப் ஸ்கொல்ஸ் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொதுக் கடன் 75% ஆக உயரும் என தற்போதைய நிதி அமைச்சு கணித்துள்ளது.
கிழக்கு ஜேர்மனியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வணிகம் குறித்த மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கடந்த முறை நாம் கண்ட அதிகரிப்பின் வரிசையில் பொதுக் கடன் உயர்வதைக் காண்போம் என கூறினார்.
அந்தவகையில் இது முடிவடையும் நேரத்தில் பொதுக் கடன் சுமார் 80% ஆக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பகிரவும்...