பேஸ்புக் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பொலிஸிடம் சிக்கிய குற்றவாளி!
பிரிட்டிஷ் கொலம்பியாவில் தேடப்பட்டுவந்த குற்றவாளியொருவர், பேஸ்புக் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.
கொலம்பியா பொலிஸாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளியின் புகைப்படத்தை, தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பிய பொலிஸார், இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டனர்.
இதைக்கண்ட குற்றவாளி, தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பேஸ்புக் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், எச்சரிக்கை தகவல், முட்டாள்களே: நான் தற்போது எட்மன்டன் நகரில் இருக்கின்றேன், நான் திரும்ப வரமாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, பேஸ்புக் மூலம் குற்றவாளியின் இருப்பிடத்தை கண்டுபிடித்த பொலிஸார், எட்மன்டன் நகரில் வைத்து அவரை கைது செய்தனர்.