Main Menu

இன்று மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் 27 ஆவது வாரம்!

கடந்த நவம்பர் 17 ஆம் திகதி, வரிக்குறைப்பு, எரிபொருள் விலைக்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டு மஞ்சள் மேலங்கி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. வீதிகளில் வாகனம் பழுதடைந்து நிற்கும் போது அதன் ஓட்டுனர் மஞ்சள் மேலங்கியினை அணிந்துகொண்டு நிற்கவேண்டும். அதேபோல் தமது வாழ்க்கையும் நடுவழியில் பழுதடைந்து நிற்கின்றது என தெரிவிக்க, போராளிகள் மஞ்சள் மேலங்கியினை அணிந்துகொண்டு வீதிகளில் இறங்கினர். 

ஒவ்வொரு வார ஆர்ப்பாட்டத்தின் போதும் வன்முறைகள் ஏற்பட்டு பலத்த சேதம் ஏற்பட்டிருந்தது. கடைகள் வியாபாரத்தளங்கள் சூறையாடப்பட்டதோடு, பொது சொத்து வாகனக்களும் எரியூட்டப்பட்டன. குறிப்பாக டிசம்பர், ஜனவரியில் பலத்த வன்முறை ஏற்பட்டு பரிஸ் குறிப்பாக
Champs-Elysées சுடுகாடாய் மாறியது. இதுவரை 10,000 மேற்பட்டோர் கைதாகினர். 

ஆரம்பத்தில் சில சலுகைகளை அரசு தரப்பில் அறிவித்திருந்தாலும், அவற்றை போராளிகள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். ஆர்ப்பாட்டம் பெப்ரவரி மார்ச் மாதங்களில் மீண்டும் தொடர்ந்தது. 

பின்னர் அரசு, சலுகைகள் அறிவிப்பதை நிறுத்திவிட்டு, போராட்டத்தினை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முனைந்தது. அதன் எதிரொலியால் பரிசில் பல இடங்களில் போராட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை பரிஸ் தாண்டி, Nice, Lyon என அதிகரித்தது.

தற்போது பரிசில் சோம்ப்ஸ்-எலிசேயில் போராட்டத்துக்கு தடை விதித்து ஆறு வாரங்கள் ஆகியுள்ளன. இன்று மே 18 ஆம்  திகதி, இந்த மஞ்சள் மேலங்கி போராட்டம் ஆறாவது மாதத்தை எட்டியுள்ளது.

கடந்த இரு வாரங்களில் மிக குறைவான எண்ணிக்கையுடைய போராளிகளே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தபோது, இன்றைய ஆறாவது மாத ஆர்ப்பாட்டம் மிக முக்கியமான தருணமாக அமைந்துள்ளது.

பகிரவும்...