புலனாய்வுத் துறை தலைவரது கடிதம் வெளியானது!
உயிர்த்த ஞாயிறுதினத்தன்று நாட்டில் தற்தொலைத் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்றும் இதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி தேசிய புலனாய்வுத் துறையின் தலைவர் சிசிர மென்டிஸ் , பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவுக்கு அறிவித்திருக்கும் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது நேற்றைய தினம் சில இணையத் தளங்கள் இந்த கடிதத்தினை வெளியிட்டிருந்தன.
பாராளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையில் நேற்று முன்தினம் சாட்சியம் வழங்கியிருந்த சிசிர மென்டிஸ், தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து முன்னதாக எழுத்துமூலம் பொலிஸ் மா அதிபருக்கு தெரியப்படுத்தியிருந்ததாக கூறியிருந்தார்.
அதே சமயம் நேற்று அறிக்கையொன்றை வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்குதல் குறித்து எந்த முன்னெச்சரிகையும் தனக்கு கிடைக்கவில்லை என தெரிவித்திருந்தார் இந்த நிலையிலேயே இந்த கடிதம் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்