பிரான்சின் புதிய பிரதமராக Jean Castex தேர்வு
நாட்டின் புதிய பிரதமரினை ஜனாதிபதி
இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷியுடன் இணைந்து பணியாற்றியிருந்த Jean Castex என்பவரை நாட்டின் புதிய பிரதமராக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். இவர் Prades (Pyrénées-Orientales) நகரின் நகர முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். எத்துவார் பிரதமர் பிரதமர் பதவியில் இருந்து விலகிக்கொண்டதும், அவருக்கு பதிலாக இவர் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேசிய விளையாட்டு குழுமத்தில் 2019 ஆம் ஆண்டில் இருந்து முக்கிய பதவியில் இருக்கும் இவர், 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முனைப்புடன் செயற்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.