பிரேசிலில் உணவகமொன்றில் துப்பாக்கிச் சூடு.. பலர் பலி
பிரேசில் – வடக்கு பாரா மாநிலத்தில் உணவகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆயுதங்களுடன் வந்த 7 பேர் கொண்ட குழு, உணவகத்திற்குள் நுழைந்து இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்களும் உயிரிழந்துள்ள நிலையில், காயமடைந்த மேலும் சிலர் காவல்துறை பாதுகாப்பின் கீழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.