Main Menu

பிரித்தானியாவின் புதிய பிரதமர் பிரான்ஸிற்கு விஜயம்!

பிரித்தானியாவின் புதிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பிரான்ஸிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இவர் எதிர்வரும் சில வாரங்களில் பிரான்ஸிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய பிரதமராக பதவியேற்றதன் பின்னர் பொரிஸ் ஜோன்சன் செல்லவுள்ள முதல் வெளிநாட்டு விஜயமாக இது அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் என பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ள நிலையில், குறித்த விஜயம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

இதன்போது பொரிஸ் ஜோன்சன், பிரான்ஸ் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளைச் சந்தித்து பேசவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.