பிரிட்டன் பிரதமர் ஜூன் 7 அன்று பதவி விலகுவார்
பிரிட்டனில் பிரதமர் தெரேசா மே, அடுத்த மாதம் 7ஆம் தேதி தாம் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் சுமுகமாக விலகுவதற்குத் தம்மால் ஆன அனைத்தையும் செய்துவிட்டதாகவும் ஆனால் அதனை நிறைவேற்ற இயலவில்லை என்றும் அவர் கூறினார்.
திருமதி மேயின் பிரெக்சிட் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் பதவி விலகவேண்டும் என்ற நெருக்குதல் அதிகரித்துவந்தது. பிரிட்டனின் அமைச்சரவையிலிருந்து பல அமைச்சர்கள் விலகினர்.
திருமதி மே கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதால், கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவருக்கான போட்டி இனி அதிகாரபூர்வமாகத் தொடங்கலாம்.
அடுத்த பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும்வரை திருமதி மே பராமரிப்புப் பிரதமராகப் பதவியில் தொடர்வார்.