Main Menu

பிரான்ஸ் வான்பரப்பில் பிரித்தானிய விமானங்கள் மோதி விபத்து!

பிரான்ஸ் வான்பரப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.

இரண்டு பிரித்தானிய இலகுரக விமானங்கள் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் விமானம் ஒன்றில் பயணித்த விமானியும், பயணியுமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்குள்ளான மற்றுமொரு விமானத்தில் பயணித்த விமானி பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

விபத்து இடம்பெற்றமைக்கான உடனடி காரணம் எதுவும் இதுவரையில் வெளியிடப்படாத நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.