பிரான்ஸ் பிரதமர் எத்துவார் பிலிப் பதவியை துறந்தார்!
பிரான்ஸ் பிரதமர் எத்துவார் பிலிப் (Edouard Philippe) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அரசாங்கத்திற்கு மூன்று ஆண்டுகள் தலைமை தாங்கிய பின்னர் தனது ராஜினாமா கடிதத்தை, இன்று (வெள்ளிக்கிழமை) காலை பிரதமர் எத்துவார் பிலிப், ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த கோரிக்கையை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஏற்றுக்கொண்டதாக, எலிசே மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பிலிப், ஜனாதிபதியை விட மிகவும் பிரபலமானவராகக் கருதப்பட்டாலும், ஆளும் லா ரெபுப்லிக் என் மார்ச்சே வார இறுதியில் உள்ளூர் தேர்தல் முடிவுகளை மோசமாகக் கொண்டிருந்தது.
இந்த பின்னணியில் மக்ரோன் புதிய அணியைத் திட்டமிட்டதால், பிரதமர் எத்துவார் பிலிப் தானே முன்வந்து பதவியை இராஜினாமா செய்துள்ளார்.