Main Menu

பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: நடால், தியேம், ஹெலப், ஸ்வீடோலினா நான்காவது சுற்றுக்கு முன்னேற்றம்!

பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் நடால், தியேம், ஹெலப், ஸ்வீடோலினா ஆகியோர் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால், இத்தாலியின் ஸ்டெபனோ டிராவாக்லியாயை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ரபேல் நடால், 6-1, 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.


இன்னொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில், ஜேர்மனியின் அலெக்ஸண்டர் ஸ்வெரவ், இத்தாலியின் மார்கோ செச்சினாடோவுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-1, 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் அலெக்ஸண்டர் ஸ்வெரவ், வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.


மற்றொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில், ஒஸ்திரியாவின் டோமினிக் தியேம், நோர்வேயின் காஸ்பர் ரூட்டை எதிர்த்து விளையாடினார்.

இப்போட்டியில் 6-4, 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்குகளில் டோமினிக் தியேம் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார்.


பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில், ரோமேனியாவின் சிமோனா ஹெலப், அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவுடன் மோதினார்.

எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில் 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்குகளில் சிமோனா ஹெலப், வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.


இன்னொரு பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில், உக்ரேனின் எலினா ஸ்விடோலினா, ரஷ்யாவின் எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

பரபரப்பாக நகர்ந்த இப்போட்டியில், 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்குகளில் எலினா ஸ்விடோலினா, வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

பகிரவும்...
0Shares