Main Menu

பிரான்ஸ் சினிமாவின் பிரபல இயக்குனர் காலமானார்

பிரான்ஸ் சினிமா உலகின் பிரபல இயக்குனர் ஜீன்-பியர் மோக்கி தனது 86 ஆவது வயதில் காலமானார்.

ஜீன்-பியர் மோக்கி உடல்நலக்குறைவு காரணமாக தனது இல்லத்தில் உயிரிழந்ததாக அவரது மகன் ஸ்ரனிஸ்லஸ் நோர்டி நேற்று (வியாழக்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜீன்-பியர் மோக்கி ஒரு இயக்குனராக மட்டுமில்லாது, தயாரிப்பாளராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், தயாரிப்பாளராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

60 திரைப்படங்களுக்கு மேல் இயக்கியுள்ள இவர், நாற்பதுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் இயக்கியுள்ளார்.

நீஸ் மாவட்டத்தில் ஜூலை 6 ஆம் திகதி, 1929 ஆம் ஆண்டு இவர் பிறந்த ஜீன்-பியர் 1948 ஆம் ஆண்டு லெஸ் காஸ்-பைட்ஸ் எனும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.