பிரான்ஸில் புதிதாக 30,000 பேருக்கு கொரோனா தொற்று – 5 மில்லியன் பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது
பிரான்ஸில் புதிய கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை நேற்று சனிக்கிழமை நிலவரப்படி 30,000 ஐ நெருங்கியுள்ளது.
அதே நேரத்தில் முதல் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 5 மில்லியனாக உயர்ந்தது என சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசாங்கம் போராடி வரும் நிலையில், சனிக்கிழமை மட்டும் 29,759 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை வைத்தியசாலைகளில் வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 169 அதிகரித்து மொத்த இறப்பு எண்ணிக்கை 64,978 ஆக உயர்ந்துள்ளது.
பிரித்தானியாவை அடுத்து உலகளவில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரான்ஸ் 5 ஆவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் பிரான்ஸில் காணப்படும் தளவாட சிக்கல்கள் மற்றும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக தடுப்பூசி திட்டத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் 241,814 பேர் முதல் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டதாகவும் 2,236,066 பேருக்கு இரண்டாவது முறையாகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.