Main Menu

பிரான்ஸில் எட்டு இலட்சம் பேர்வரை வேலை இழக்கும் அபாயம்: அரசாங்கம் மதிப்பீடு

பிரான்ஸில் எதிர்வரும் மாதங்களில் எட்டு இலட்சம் பேர்வரை வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதும், நிலைமை முன்னரைப் போல இயல்பாக இல்லை என்பதால் இந்த வேலை இழப்பு உருவாக உள்ளதாக நிதி அமைச்சர் புருனோ லு மைர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நடவடிக்கைகள் விரைவாக மீண்டும் தொடங்க வேண்டும் எனவும் இந்த கோடையில் செயற்பாடு இயல்பு நிலைக்கு வர வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

முதல் காலாண்டில் 500,000 இற்குக்கும் மேற்பட்டோர் வேலைகளை இழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் காட்டியதால் இந்த கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

ஐரோப்பா மண்டலத்தின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் 2020ஆம் ஆண்டில் 11 சதவீதம் சுருங்கிவிடும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

பகிரவும்...
0Shares