பிக் பொஸ் – சீசன் 3 மீண்டும் ஆரம்பம்
விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரு வருடங்களாக பிக் பொஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
அந்தவகையில், இம் முறை பிக் பொஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனையும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்குகின்றார்.
அரசியல் கட்சி பணிகளுக்கிடையே இந்தியன் 2 திரைபடத்தில் நடிக்கவிருக்கும் கமல், இந்த முறை நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க இருக்கின்றார்.
இந்த வருட நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள்.இந்த நிகழ்ச்சி எதிர்வரும் ஜூன் மாதத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது.
மேலும், போட்டியாளர்களின் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கடந்த 2017, 2018 ஆம் ஆண்டுகளில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதில், முதல் சீசனில் நடிகர் ஆரவ் வெற்றி பெற்றார். இரண்டாவது சீசனில் நடிகை ரித்விகா வெற்றி பெற்றார்.