Main Menu

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி – மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் தி.மு.க. போட்டியிட்டது. இதில் புதுச்சேரி உள்ளிட்ட மொத்தமுள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி 37 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. 
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தி.மு.க தலைவர், மதிப்பிற்குரிய நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.