Main Menu

பாடசாலைகளின் விடுமுறைகளும் இணைய வழிப் பாடங்களும்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதாவது, ஏப்ரல் 2ம் திகதி மாலையுடன் பிரான்சில் அனைத்துப் பாடசாலைகளும் கிட்டத்தட்ட 4 வாரங்களிற்கு மூடப்படுகின்றன.

முதலில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (திங்கட்கிழமை விடுமுறை நாள் என்பதால்) 6ம் திகதியிலிருந்து 9ம் திகதி வரை, அனைத்து மாணவர்களிற்கும் இணையவழிக் கல்வி (cours à distance) உறுதி செய்யப்படும்.

10ம் திகதியிலிருந்து, 25ம் திகதி வரை, அனைவரிற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

26ம் திகதியிலிருந்து, பாலர் பாடசாலைகள் (École maternelle), மற்றும் ஆரம்பப் பாடசாலைகளின் (École élémentaire) மாணவர்களிற்கு பாடசாலைகள் ஆரம்பிக்கும்.

அதே நேரம் 26ம் திகதியிலிருந்து, கொலேஜ் மற்றும் விசே மாணவர்களிற்கு மீண்டும் இணையவழிக் கல்வி ஆரம்பமாகும்.

மே மாதம் 3ம் திகதியிலிருந்து கொலேஜ் மற்றும் லிசேக்கள் ஆம்பமாகும்.



ஆரம்பத்தில் இவை அரைக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டே, ஒன்று விட்ட ஒரு நாள் பாடசாலைகளிலும், மற்றைய நாள் இணையவழியில் எனவும் நடாத்தப்படுவதற்கே சாத்தியம் உள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.