பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா – அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி
லதா மங்கேஷ்கருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளதாக அவரது மருமகள் ரச்சனா உறுதிபடுத்தி உள்ளார்.
லதா மங்கேஷ்கர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிமும்பை:
இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ள நிலையில் திரையுலகம், அரசியல் விளையாட்டுத்துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
லதா மங்கேஷ்கருக்கு லேசான அறிகுறிகள் உள்ளதாக அவரது மருமகள் ரச்சனா உறுதிப்படுத்தி உள்ளார். லதா மங்கேஷ்கர், தாதாசாகேப் பால்கே விருது மற்றும் பிரான்சின் உயரிய விருது, உள்பட பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார். 1948 முதல் 1974 க்கு இடையில் 25,000 பாடல்களுக்கு மேல் அவர் பாடியுள்ளார்.
கடந்த 2001 ஆம் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது லதா மங்கேஷ்கருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.