பாக்தாத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் – 8 பேர் பலி
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 8 பேர் பலியாகினர்.
சம்பவத்தில் 15 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவித்துள்ளன.
குறித்த தற்கொலை குண்டு தாக்குதல் சனநெரில் மிக்க சந்தை பகுதியிலே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவித அமைப்புக்களும் உரிமை கோரவில்லை என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.