Main Menu

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இருந்து நியூஸி மூத்த வீரர் நீக்கம்!

பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் இருபதுக்கு இருப்பது போட்டிகளில் விளையாடும் நியூஸிலாந்து அணியில் இருந்து மூத்த வீரர் ரோஸ் டெய்லர் நீக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணி நியூஸிலாந்தில் பயணம் மேற்கொண்டு 3 இருபது ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்நிலையில், இப்போட்டித் தொடருக்கான 18 பேர் கொண்ட நியூஸிலாந்து அணி நேற்று சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதில் 36 வயதாகும் மூத்த வீரர் டெய்லர் இடம்பெறவில்லை. டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடாத காரணத்தால் அவர் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதேவேளை காயம் காரணமாக பந்துவீச்சாளர் பொ்குசனும் நியூஸிலாந்து அணியில் இடம்பெறவில்லை.

அத்தோடு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வு எடுத்துக் கொண்ட முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டிரன்ட் போல்ட், இறுதி இரு டி20 போட்டிகளில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதி மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.