பாகிஸ்தானில் பேருந்து விபத்து – 15 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் பேருந்து மீது வேன் மோதி தீப்பிடித்ததில் 15 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் தேரா காசி கான் மாவட்டத்திலிருந்து குவெட்டாவுக்கு பயணிகள் பேருந்து இன்று (வெள்ளிக்கிழமை) சென்ற நிலையில் அதன் எதிர் திசையில் வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து பேருந்துடன் மோதியதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினர் விரைவதற்குள் இரண்டு வாகனங்களும் முற்றிலும் எரிந்தன.
இந்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்தார்.
குறித்த விபத்து தொடர்பாக அந்நாட்டு பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
பகிரவும்...