பயிற்சிகளை இன்று முதல் ஆரம்பிக்கும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்!
சுகாதார அதிகாரிகளின் அறிவுரைகளுக்கு அமைய, மிகுந்த அவதானத்துடன் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சிகளை தொடங்குகின்றனர்.
பயிற்சிகளுக்காக மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடும் 13 இலங்கை வீரர்கள், இன்று (திங்கட்கிழமை) கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் பயிற்சிகளை தொடங்குகின்றனர்.
இதேநேரம், பயிற்சிகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள வீரர்களில் பெரும்பாலானோர் பந்துவீச்சாளர்கள் ஆவர்.
இன்னும், தெரிவு செய்யப்பட்டுள்ள வீரர்கள் 12 நாட்கள் கொண்ட வதிவிட முகாமொன்றில் பங்கெடுத்தே கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளதால், ஒவ்வொரு நாளும் பயிற்சிகள் நிறைவடைந்த பின்னர் வீரர்கள் அனைவரும் வீடுகளுக்கு அனுப்பப்படாமல் ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுவர்.
இந்த வதிவிட முகாமிற்கான பயிற்சியாளர்கள் குழாம், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தருடன் சேர்த்து நான்கு அங்கத்தவர்களை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...