பயங்கரவாத கூலிப்படையை உருவாக்க முயன்ற முன்னாள் ஜேர்மன் வீரர்கள் கைது
யேமனின் உள்நாட்டுப் போரில் சண்டையிட பயங்கரவாத கூலிப்படையை உருவாக்க முயன்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு முன்னாள் ஜேர்மன் வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெற்கு ஜேர்மனியில் பொலிஸார் நடத்திய சோதனையை அடுத்து, கைது செய்யப்பட்ட இருவர் மீதும் பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வீரர்களைக் கொண்ட ஒரு தனியார் இராணுவத்திற்கு 150 ஆட்களை நியமிக்க அவர்கள் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
யேமனில் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சவுதி அரேபியா அரசுக்கு அவர்கள் தங்கள் சேவைகளை வழங்க விரும்பினர் என்றும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
சவுதி அரேபியாவின் ஆதரவு பெற்ற சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுக்கும் ஆயுதமேந்திய ஹூதி இயக்கத்துக்கும் இடையே கடந்த 2014 முதல் இடம்பெறும் உள்நாட்டுப் போரயில் யேமன் பாதிக்கப்பட்டுள்ளது.