Main Menu

பிரான்சில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் – 135 € தண்டப்பணம்

நாளை முதல் அனைத்து பொது இடங்களுக்கும் பயணிக்கும் போது முக்கவசம் அணிவது கட்டாயமாகும். ஜனாபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்த இந்த புதிய நடை முறை நாளை, ஜூலை 20 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருகின்றது. இத்தகவலை சுகாதார அமைச்சர் Olivier Véran மற்றும் பிரதமர் Jean Castex ஆகியோர் தெளிவுபடுத்தியுள்ளனர்.  பொது இடங்கள் அனைத்திலும் முகக்கவசம் அணிந்து பயணிப்பது கட்டாயமாகின்றது. இதை மீறுவோருக்கு நான்காம் கட்ட தண்டப்பணமான €135 யூரோக்கள் செலுத்த நேரும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பகிரவும்...
0Shares