நான்கு மாதங்களில் இத்தனை கோடிகளா? விற்பனையில் அசத்தும் சியோமி
சியோமி நிறுவனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனை செய்திருக்கும் மொத்த ஸ்மார்ட்போன் விவரங்களை வெளியிட்டுள்ளது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவமான சியோமி சந்தை ஆய்வு நிறுவனங்களுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. 2019 ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட மொத்த ஸ்மார்ட்போன் யூனிட்கள் பற்றி ஆய்வு நிறுவனங்கள் தவறான விவரம் வழங்கியதாக சியோமி தெரிவித்திருக்கிறது.
சியோமி நிறுவன தலைவர் லெய் ஜூன், 2019 ஆண்டிற்கான முதல் காலாண்டு காலத்தில் விற்பனையான மொத்த ஸ்மார்ட்போன் பற்றி சில சந்தை ஆய்வு மையங்கள் வெளியிட்ட தகவல்களை பல்வேறு ஊடக நிறுவனங்கள் வெளியிட்டன. இதுகுறித்து லெய் ஜூன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவது.
“இவ்வாறு வெளியான விவரங்கள் சரியானதாக இல்லை. இவை எங்களது ஸ்மார்ட்போன் விநியோகத்திற்கு முற்றிலும் முரணாக இருக்கிறது. 2019 முதல் காலாண்டில் எங்களது ஸ்மார்ட்போன் விற்பனை 2.75 கோடிகளை கடந்திருக்கிறது” என லெய் ஜூன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக வெளியான தகவல்களில் 2019 முதல் காலாண்டில் சியோமி நிறுவனம் மொத்தம் 2.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருந்ததாக சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் (ஐ.டி.சி.) தெரிவித்தது. இத்துடன் சியோமி நிறுவனம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 10.2 சதவிகிதம் சரிவை சந்தித்ததாக ஐ.டி.சி. தெரிவித்தது.
ஆசிய பசிபிக் பகுதியில் இந்தியாவில் மட்டுமே சியோமி வளர்ச்சியை பதிவு செய்திருந்தது என ஐ.டி.சி. தெரிவித்தது. மற்றொரு சந்தை ஆய்வு நிறுவனம் சியோமி நிறுவனம் மொத்தம் 2.78 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருந்தது என தெரிவித்தது.