நாட்டை விட்டு வெளியேற பணிக்கப்பட்ட ஒருவருக்கு 11 ஆண்டுகள் சிறை
பிரான்சில் இருந்து வெளியேறவேண்டும் என பணிக்கப்பட்ட ஒருவர் குற்றச்செயலில் ஈடுபட்டதை அடுத்து அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
24 வயதுடைய குறித்த நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபரில் பரிசில் உள்ள Cochin மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருந்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அதன்போது மதுதுவிடுதி ஒன்றில் அளவுக்கு அதிகமாக குடித்ததில் மயங்கி விழுந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவமனையில் குணமடைந்தவர், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நடக்க முடியாத 36 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பின்னர் கைது செய்யப்பட்ட அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முதலே நாட்டை விட்டு வெளியேறவேண்டும் (OQTF) என பணிக்கப்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது.
இவ்வாரத்தில் அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பகிரவும்...