Main Menu

நாட்டை பிரித்து விட்டார்களோ என்ற சந்தேகம் – பத்தரமுல்ல சீலாரத்தன தேரர்

யாழ்ப்பாணம் விமான நிலையத்தை அமைத்துள்ளதன் மூலம் நாட்டை ஏற்கனவே பிரித்து விட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும், ஜனசெத பெரமுனவின் தலைவர் தலைவரான பத்தரமுல்ல சீலாரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கவில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே வடக்கில் விமான நிலையம் ஒன்றை அமைக்கத் தொடங்கி விட்டார்.

இதன் மூலம் இந்தியாவையும் சிறிலங்காவையும் இணைக்க முடியும். அவர்கள் ஏற்கனவே நாட்டைப் பிரித்து விட்டார்களோ என்ற தீவிரமான சந்தேகத்தை இது ஏற்படுத்தியுள்ளது.

பல ஆண்டுகளாக கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக வந்தவர்கள், இனி பலாலி விமான நிலையம் வழியாக செல்வார்கள்.

முதலாவது விமானம் கட்டுநாயக்கவில் தரையிறங்கிய பின்னரே, பலாலியில் தரையிறங்க வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...