நாடாளுமன்ற வரலாற்றிலேயே துன்பமிக்க தினம் – ராகுல் கண்டனம்!
இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே துன்பமிக்க தினம் என காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
‘நாதுராம் கோட்சே’ ஒரு தேசபக்தர் என நாடாளுமன்றத்தில் பிரக்யா சிங் தாக்கூர் கூறியமைக்கு கண்டனம் தெரிவித்து ராகுல் காந்தி குறித்த பதிவை இட்டுள்ளார்.
குறித்த பதிவில், ”தீவிரவாதி கோட்சேவை தீவிரவாதி பிரக்யா தேசபக்தர் என்று கூறியுள்ளார். இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இது துன்பமிக்க தினம்” என தெரிவிட்டுள்ளார்.
மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என பிரக்யா சிங் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்திருந்தார். இதற்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு அவர் மீது நடவடிக்கையும் எடுத்துள்ளது.
அதன்படி பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இருந்து பிரக்யா சிங் தாக்கூர் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.