Day: November 28, 2019
உள்ளுராட்சி தேர்தல் குறித்து ஆலோசனை!
உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பாக, அனைத்துக் கட்சிகளுக்கு இடையேயான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. குறித்த ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இன்று (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெற்றது. இதன்போது உள்ளுராட்சி தேர்தலில், வாக்குப்பதிவு இயந்திரத்துடன் கூடிய விவிபாட் மூலம் தேர்தல் நடத்தமேலும் படிக்க...
நாடாளுமன்ற வரலாற்றிலேயே துன்பமிக்க தினம் – ராகுல் கண்டனம்!
இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே துன்பமிக்க தினம் என காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். ‘நாதுராம் கோட்சே’ ஒரு தேசபக்தர் என நாடாளுமன்றத்தில் பிரக்யா சிங் தாக்கூர் கூறியமைக்கு கண்டனம் தெரிவித்து ராகுல் காந்தி குறித்த பதிவை இட்டுள்ளார். குறித்தமேலும் படிக்க...
அழிந்துபோன தேசத்தையும் சிதைந்துபோன குடும்பங்களையும் மீளக் கட்டியெழுப்ப அரசாங்கத்துடன் பேசத் தயார்
அழிந்துபோன எமது தேசத்தையும் சிதைந்துபோன எமது குடும்பங்களையும் மீளக் கட்டியெழுப்புகின்ற தொடர்ச்சியாக அரசாங்கத்துடன் பேசத் தயாராக இருக்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்மேலும் படிக்க...
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 5 ஆண்டுகள் சிறை
மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக அந்நாட்டு நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது முன்னாள் ஜனாதிபதி குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அவருக்குமேலும் படிக்க...
ஐ.நா. பிரேரணையை நிராகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட உள்ளது…?
மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய பிரேரணையை நிராகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் இன்று (வியாழக்கிழமை) சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சராக கடமையைப் பொறுப்பேற்ற பின்னர்மேலும் படிக்க...
சுவிஸ் தூதரக ஊழியர் தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிக்கை
இம்மாதம் 25 ஆம் திகதி கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் இலங்கை ஊழியர் தொடர்பான குற்றச் சம்பவம் குறித்து இலங்கை அரசாங்கம் தீவிரமாக கவனம் செலுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று தகவல் கிடைத்ததும், இந்த விடயம் தொடர்பாக விசாரணையை ஆரம்பிப்பதற்கு பொலிஸார்மேலும் படிக்க...
ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மோசடியில் ஈடுபட்டுவரும் சில தனி நபர்கள் மற்றும் குழுக்கள் தமக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவித்து, மக்களை ஏமாற்றி தவறாக சலுகைகளை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருவதாக சாட்சிகளுடன் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. பல்வேறு பதவிகள், நியமனங்கள், டென்டர்கள்மேலும் படிக்க...
பிரபல திரைப்பட நடிகர் பாலாசிங் காலமானார்
நாசர் எழுதி இயக்கி நடித்த ‘அவதாரம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் பாலாசிங். இந்த படத்தில் இவரின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், அவருக்கு அடுத்தடுத்து பெரிய பட வாய்ப்புகள் வர தொடங்கின. மளையாளத்தில் அறிமுகமானாலும் தமிழில் குணசித்திர, வில்லன்மேலும் படிக்க...
பிறந்த நாள் வாழ்த்து – செல்விகள். துஷாலா & துஷ்மிலா மோகன் (28/11/2019)
சுவிஸ் பேர்ன் மாநகரில் வசிக்கும் மோகன் சொரூபி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வி செல்வி. துஷாலா 6ம் திகதி ஒக்டோபர் மாதம் வியாழக்கிழமை அன்று வந்த 23 வது பிறந்த நாளையும், கனிஷ்ட புதல்வி செல்வி. துஷ்மிலா 28ம் திகதி நவம்பர் மாதம்மேலும் படிக்க...
தொழில் நுட்ப கோளாறு – இருளில் இல்-து-பிரான்சின் இரு மாவட்டங்கள்
நேற்று புதன்கிழமை இரவு இல்-து-பிரான்சின் இரு மாவட்டங்கள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளன. Hauts-de-Seine மற்றும் Val d’Oise மாவட்டங்களில் மொத்தமாக 200,000 வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. Cergy-Pontoise பகுதியில் உள்ள RTE துணை வழங்கு நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகமேலும் படிக்க...
13 இராணுவ வீரர்கள் பலி! – உலங்கு வானூர்தியின் கறுப்பு பெட்டி மீட்பு!
மாலி நாட்டில் உயிரிழந்த 13 இராணுவ வீரர்கள் பயணித்த உலங்குவானூர்தியின் கறுப்பு பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கருப்பு பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளமை விசாரணைகளை துரிதப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் எதையும் வெளியிடாமல் இராணுவ பேச்சாளர் Frederic Barbryமேலும் படிக்க...
நைஜீரியாவில் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் கைது!
நைஜீரியாவில் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறைச்சாலையின் உயர்நிலை பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வைத்தியர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறைச்சாலைக்குள் பயன்படுத்துவதற்கு கைதி ஒருவருக்கு தொலைபேசி வழங்கிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிப்பு : மத்திய அரசின் உத்தரவை உறுதி செய்தது தீர்ப்பாயம்!
விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அரசின் உத்தரவை டெல்லி தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய அரசுமேலும் படிக்க...
தமிழகத்தில் இரண்டு புதிய மாவட்டங்கள் இன்று உதயமாகிறது
தமிழகத்தில் இரண்டு புதிய மாவட்டங்கள் இன்று உதயமாகின்ற நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் இந்த புதிய மாகாணங்களுக்கு உத்தியோகபூர்வமாக பெயர் அறிவிக்கப்படுகின்றன. தமிழகத்தின் 35 ஆவது மாவட்டமாக திருப்பத்தூரும், 36 ஆவது மாவட்டமாக ராணிப்பேட்டையும் இன்று (வியாழக்கிழமை) எடப்பாடி பழனிசாமியால் திறந்துவைக்கப்படவுள்ளன.மேலும் படிக்க...
11 பெண் குழந்தைகளின் தாய் 12-வதாக ஆண் குழந்தை பெற்றார்
ராஜஸ்தான் மாநிலத்தில் 11 பெண் குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் 42 வயதான பெண் 12-வதாக ஆண் குழந்தை பெற்றெடுத்தார். ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டம், ஜாத்சர் நகரை சேர்ந்த கதி (வயது 42) என்ற பெண், நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ஆஸ்பத்திரியில்மேலும் படிக்க...
20 ஆண்டுகளுக்கு பிறகு சிவசேனா தலைமையில் மீண்டும் கூட்டணி அரசு
மராட்டியத்தில் 20 ஆண்டுக்கு பிறகு மீண்டும் சிவசேனா தலைமையில் கூட்டணி அரசு மலர்கிறது. மகாராஷ்டிரா ஆரம்ப காலம் முதல் காங்கிரசின் கோட்டையாக இருந்து வந்தது. காங்கிரசை வீழ்த்துவதற்காக இந்துத்வாவை தீவிர கொள்கையாக கொண்ட சிவசேனாவும், பாரதீய ஜனதாவும் 1989-ம் ஆண்டு நாடாளுமன்றமேலும் படிக்க...
7000 பேர் நியமன இடை நிறுத்தத்தை பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை: துரைரெத்தினம்
7000 பேருக்கு கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட நியமனத்தை இடை நிறுத்துமாறு கோரியதை மீள் பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் முன்னாள் கிழக்கு மாகாண சபை சிரேஷ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,மேலும் படிக்க...
இனங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைக்கும் அரசியல் வாதிகள் ; தாய்நாட்டுக்கான தேசிய வீரர்கள் அமைப்பு
தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி அரசியல் இலாபம் அடைவதற்காக இனங்களுக்கிடையில் குரோதத்தை தூண்டும் வகையில் அரசியல்வாதிகள் செயற்படுகின்றனர். ஆகையால் இனங்க ளுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பயணத்தில் தம்முடன் ஒன்றிணையுமாறு முன்னாள் மேஜரும் தாய்நாட்டுக்கான தேசிய வீரர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமானமேலும் படிக்க...
தனியார் வங்கியில் 33 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை
வென்னப்புவ நகரில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றினுள் நுழைந்த கொள்ளையர்கள் வங்கியின் வைப்பகத்தை உடைத்து அதிலிருந்த சுமார் 33 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். கடந்த திங்கட்கிழமை இரவு இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்மேலும் படிக்க...
நேபாளில் பஸ் விபத்து 18 பேர் உயிரிழப்பு , 13 பேர் படுகாயம்
நேபாளில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 18 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததோடு , 13 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாள நாட்டின் ஆர்காஞ்சி மாவட்டத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்திற்குள் விழுந்துள்ளது. இதில்மேலும் படிக்க...