தமிழிசை எதிர்வரும் 8ஆம் திகதி தெலுங்கானா ஆளுநராக பதவியேற்பு!

தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக எதிர்வரும் 8ஆம் திகதி பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2014-ஆம் ஆண்டு முதல், தமிழக பாரதிய ஜனதா தலைவர் பதவியிலிருந்து வந்த தமிழிசை சௌந்தரராஜன் அண்மையில் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
ஆளுநராக நியமிக்கப்பட்டதால், அவர் தனது கட்சிப் பதவியையும், அடிப்படை உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையிலேயே தெலுங்கானா ஆளுநராக எதிர்வரும் 8ஆம் திகதி தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.