Main Menu

தமி­ழர்கள் மீண்டும் ஏமாறமாட்­டார்கள் : பந்துல

அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்­தத்­திற்கு அமை­வாக தமிழர் பிரச்­சி­னைக்குத் தீர்­வினைப் பெற்­றுத்­த­ரு­வ­தாக வடக்கில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறு­வதை நம்பி, தமிழ் மக்கள் மீண்­டு­மொரு முறை ஏமா­ற­மாட்­டார்கள்.

இலங்­கையர் என்ற அடிப்­ப­டையில் சம உரி­மை­களை அனு­ப­விப்­ப­தற்கு ஏது­வான மாற்­ற­மொன்­றையே அவர்கள் விரும்­பு­வார்கள். அதற்கு ஏற்­பு­டைய தலை­மைத்­து­வத்­திற்கே தமிழ் மக்கள் வாக்­க­ளிப்­பார்கள் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன தெரி­வித்தார். 

கொழும்­பி­லுள்ள எதிர்க்­கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது:

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ அறி­விக்­கப்­பட்­டதன் பின்னர் களனி விகா­ரையில் ஆரம்­பித்து, நேற்று (நேற்று முன்­தினம்) கொழும்பில் மதத்­த­லை­வர்­க­ளு­ட­னான சந்­திப்பு வரை நீண்ட பய­ணத்தை நாங்கள் மேற்­கொண்­டி­ருந்தோம். இப்­ப­ய­ணத்தின் போது பல்­வேறு பிர­தே­சங்­க­ளிலும் விவ­சா­யிகள், சிறிய நடுத்­தர கைதொழில் முயற்­சி­யா­ளர்கள் பலரைச் சந்­தித்து அவர்­க­ளு­டைய பிரச்­சி­னை­களைக் கேட்­ட­றிந்தோம்.

அதன்­போது அவர்­களில் பலரும் தாம் எதிர்­கொண்­டி­ருக்கும் பாரிய கடன்­சுமை தொடர்பில் பகிர்ந்­து­கொண்­டார்கள். மத்­திய வங்கி பிணை­முறி மோச­டியின் பின்னர் ஏற்­பட்ட பாரிய நட்­டத்தின் கார­ண­மாக வங்­கி­களில் கடன்­க­ளுக்­கான வட்­டி­வீதம் அதி­க­ரிக்­கப்­பட்­டது. அவ்­வாறு அதி­க­ரிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்னர் கடன் பெற்­ற­வர்­களும் அதி­க­ளவு வட்­டியைச் செலுத்த வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டனர். இதனை மீளச்­செ­லுத்த முடி­யாமல் பலர் தற்­கொலை செய்­து­கொண்ட சம்­ப­வங்­களும் உள்­ளன. வீட்­டுக்­கடன், விவ­சா­யக்­கடன், சுய­தொழில் கடன் உள்­ளிட்ட பல்­வேறு கடன்­பெ­று­நர்­களும் வங்­கு­ரோத்து நிலையை அடைந்­தனர்.

இந்­நி­லையில் எதிர்­வரும் தேர்­தலில் ஆட்­சி­ய­மைக்­கக்­கூ­டிய எந்­த­வொரு அர­சாங்­கமும் இந்தக் கடன் வழங்­கலைப் பொறுத்­த­வ­ரையில் ‘கடன் மறு­சீ­ர­மைப்புக் கொள்கை’ ஒன்­றினை ஏற்­ப­டுத்த வேண்டும். என்­டர்­பிரைஸ் ஸ்ரீலங்கா செயற்­திட்­டத்தின் ஊடாக புதிய தொழிலை ஆரம்­பிப்­ப­தற்குக் கடன் வழங்­கு­வதை விடவும், ஏற்­க­னவே ஆரம்­பித்த தொழிலைக் கைவி­டாமல் இருப்­ப­தற்கே கடன் வழங்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டி­ருக்­கி­றது. எனவே எமது எதிர்­கால அர­சாங்­கத்தில் இவ்­வி­ட­யத்­திற்கு அதிக முக்­கி­யத்­துவம் வழங்கி, கடன் மறு­சீ­ர­மைப்பு முறை­மையை ஒன்றை ஏற்­ப­டுத்தி, பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நிவா­ர­ணத்தைப் பெற்­றுக்­கொ­டுப்போம் என்றார். 

அதனைத் தொடர்ந்து ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்குப் பின்­வ­ரு­மாறு பதி­ல­ளித்தார்.

கேள்வி : மக்கள் விடு­தலை முன்­னணி தலை­மை­யி­லான தேசிய மக்கள் சக்­தியின் சார்பில் அநு­ர­கு­மார திஸா­நா­யக்க ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகப் போட்­டி­யி­டுவார் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளதே?

பதில் : அடா­வ­டித்­த­னங்­களைக் கைவிட்டு தற்­போ­தேனும் ஜன­நா­யக ரீதியில் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு மக்கள் விடு­தலை முன்­னணி முன்­வந்­தி­ருப்­ப­தை­யிட்டு மகிழ்ச்சி அடை­கின்றேன். கடந்த காலத்தில் பீட்ல் மார்ஷல் சரத் பொன்­சேகா ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகப் போட்­டி­யிட்ட போது, அவ­ருக்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்­கு­வ­தாக மக்கள் விடு­தலை முன்­னணி அறி­வித்­தது. அதே­போன்று கடந்த 2015 இல் நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கும் திரை­ம­றைவில் நின்று மக்கள் விடு­தலை முன்­னணி செயற்­பட்­டது.

கடந்த 30 வரு­ட­கா­லத்­திற்கு முன்­பு­வரை தேர்­தல்­களில் போட்­டி­யி­டு­வோரை வன்­மு­றை­களால் எதிர்த்தல், தேர்­தலில் வாக்­க­ளிப்­போரைத் தாக்­குதல் போன்­ற­வையே மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் கொள்­கை­க­ளாகக் காணப்­பட்­டன. எனினும் தற்­போ­தேனும் அவற்றை விடுத்து, மக்­க­ளிடம் சென்று வாக்­கு­களைக் கோருவோம் என்று சிந்­தித்து, ஜன­நா­யக முறையில் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு அவர்கள் முன்­வந்­தி­ருக்­கின்­றமை குறித்து நான் மகிழ்ச்சி அடை­கின்றேன்.

ஆனால் எந்­த­வொரு தரப்­பி­னரும் எமக்கு சவா­லாக முடி­யாது என்­பதே உண்மை. இது ஒரு தீர்­மானம் மிக்க தரு­ண­மாகும். நாட்டைப் பொறுத்­த­வரை மிக முக்­கி­ய­மா­ன­தொரு நிலையில், மக்கள் யாரை தலை­வ­ராகத் தேர்ந்­தெ­டுப்­பது என்ற தீர்­மா­னத்தைச் சரி­யாகச் சந்­தித்து மேற்­கொள்ள வேண்டும்.

கேள்வி : 13 ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தின் அடிப்­ப­டையில் அதி­கா­ரங்­களை வழங்கி தமிழ் மக்கள் பிரச்­சி­னைக்குத் தீர்வை வழங்­கு­வ­தாக பிர­தமர் கூறி­யி­ருக்­கிறார். வடக்கு, கிழக்கைப் பொறுத்­த­வரை உங்­க­ளது வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் நிலைப்­பாடு எத்­த­கை­ய­தாக இருக்­கி­றது?

பதில் : கோத்­த­பாய ராஜ­பக்ஷ ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்ட அதே தினத்­தி­லேயே இவ்­வி­டயம் தொடர்பில் கருத்து வெளி­யிட்டார். அனு­பவ ரீதி­யா­கவும், தர்க்க ரீதி­யா­கவும் தமி­ழர்­களின் பிரச்­சி­னைகள் குறித்த அறிந்­தி­ருப்­ப­தாகக் கூறிய அவர், அப்­பி­ரச்­சி­னை­க­ளுக்கு ஒரே நாட்­டிற்குள் ஒரே சட்­டத்தின் கீழ் சம உரி­மை­களை அனை­வரும் அனு­ப­விக்­கத்­தக்க வகையில் தீர்­வினைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தா­கவும் தெரி­வித்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தேசிய அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்­கி­யது. அதே­போன்று அவர்­களும் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­த­னுக்கு எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை வழங்­கி­னார்கள். தமிழர் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்­வினைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தா­கவும், புதிய அர­சி­ய­ல­மைப்பைத் தயா­ரிப்­ப­தா­கவும் கூறி­னார்கள். ஆனால் கடந்த 4 வரு­ட­கா­லத்தில் அவை­யெ­வையம் நடை­பெ­ற­வில்லை. இந்­நி­லையில் மீண்டும் தமிழ்­மக்கள் ஏமா­று­வார்கள் என்று நாங்கள் கரு­த­வில்லை. இலங்­கையர் என்ற அடிப்­ப­டையில் சம உரி­மை­களை அனு­ப­விக்­கத்­தக்க மாற்­ற­மொன்­றி­னையே அவர்கள் விரும்­பு­வார்கள். அதற்கு ஏற்­ற­வா­றான தலை­மைத்­து­வத்­திற்கே அவர்கள் வாக்­க­ளிப்­பார்கள். 

கேள்வி: கோத்­த­பாய ராஜ­பக்ஷ ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டு­விட்ட நிலை­யிலும் கூட, அவ­ரு­டைய அமெ­ரிக்கப் பிர­ஜா­வு­ரிமை இன்­னமும் நீக்­கப்­ப­ட­வில்லை என்று கூறப்­ப­டு­கி­றதே?

பதில் : கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் மீது காணப்­படும் அச்­சத்தின் கார­ண­மா­கவே இத்தகைய பொய்யான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. வெளிநாட்டுப் பிரஜாவுரிமை கொண்ட ஒருவர் ஜனாதிபதியாக முடியாது என்று கோத்தபாய ராஜபக்ஷவை இலக்காகக் கொண்டு அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்ட போதே அவர் மீதான அச்சம் வெளிப்பட்டுவிட்டது.

அதே அடிப்படையிலேயே தற்போது அமெரிக்கப் பிரஜாவுரிமை இன்னமும் நீக்கப்படவில்லை என்று பொய்யான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் நாட்டு மக்களின் தலைவராகவுள்ள ஒருவர், தற்போது ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஒருவர் பிரஜாவுரிமையை நீக்கிவிட்டதாக மக்களிடம் பொய் கூறுவாரா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவையனைத்தும் வேறெந்த வேட்பாளர் மீதும் இல்லாத பயம் கோத்தபாய ராஜபக்ஷ மீது இருப்பதையே வெளிப்படுத்துகின்றது.

பகிரவும்...