தமிழகம் முழுவதும் பள்ளி ஆசிரியர்கள் மீது 100 மாணவிகள் பாலியல் புகார்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு துணை கமிஷனர் ஜெயலட்சுமியின் செல்போன் எண் வெளியிடப்பட்டது. இந்த எண்ணில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் தொடர்பு கொண்டு புகார் அளித்து வருகிறார்கள்.
பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகார் கூறப்பட்டத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு துணை கமிஷனர் ஜெயலட்சுமியின் செல்போன் எண் (94447 72222)வெளியிடப்பட்டது. இந்த எண்ணில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் தொடர்பு கொண்டு புகார் அளித்து வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் பள்ளி-கல்லூரிகளில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவிகள் சுமார் 100 பேர் புகார் அளித்துள்ளனர்.
சென்னையில் அதிகபட்சமாக 22 மாணவிகள் புகார் செய்துள்ளனர். இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த உத்தர விடப்பட்டுள்ளது.
அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து வந்துள்ள புகார்கள் அந்தந்த காவல் துறை ஆணையர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.