டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பாஜகவில் இணைந்தார்
டெல்லியின் ஆளும்கட்சியான ஆம் ஆத்மியை சேர்ந்த காந்திநகர் தொகுதி எம்.எல்.ஏ. அனில் பாஜ்பாய் இன்று பாஜகவில் இணைந்தார்.
பாராளுமன்ற தேர்தலில் நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக காய்நகர்த்தி வருகிறது.
டெல்லியின் ஆளும்கட்சியான ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை இழுக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு குதிரை பேரம் நடத்தி வருவதாகவும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு பத்து கோடி ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் தலைமை மீது அதிருப்தி அடைந்திருக்கும் 14 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக டெல்லி பாஜக முன்னாள் தலைவரும் மத்திய மந்திரியுமான விஜய் கோயல் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சிய சேர்ந்த காந்திநகர் தொகுதி எம்.எல்.ஏ. அனில் பாஜ்பாய் இன்று விஜய் கோயல் முன்னலையில் பாஜகவில் இணைந்தார்.