ஜேர்மனியில் புதிய நாணயத்தாள்கள் அறிமுகம்!
ஜேர்மனியில் புதிய யூரோ நாணயத்தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
100 மற்றும் 200 யூரோ நாணயத்தாள்களே இவ்வாறு அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளன.
ஜேர்மனியில் புதிய யூரோ நாணயத்தாள்கள் அறிமுகம் செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
ஏற்கனவே 2002இல் ஒரு முறை யூரோ நாணயத்தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
ஏப்ரல் மாத இறுதியிலிருந்து 500 யூரோ நாணயத்தாள்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது.
கடந்த ஆண்டில் புழக்கத்தில் இருந்த யூரோ நாணயத்தாள்களில் ஆறு சதவிகிதம் 100 யூரோ நாணயத்தாள்கள் எனவும், ஒரு சதவிகிதம் 200 யூரோ நாணயத்தாள்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.