ஜெய்சங்கருக்கு பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி வாழ்த்து
மத்திய அமைச்சரவையில் புதிய வெளியுறவுத்துறை மந்திரியாக பொறுப்பேற்றுள்ள ஜெய்சங்கருக்கு, பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக் கூறியுள்ளார்.
லீ டிரியான் கூறுகையில், ‘என் புதிய சக பணியாளர் டாக்டர்.ஜெய்சேகருக்கு என் வாழ்த்துக்கள். உங்களை வரவிருக்கும் ஜி7 மாநாட்டில் நேரில் சந்திக்க ஆவலாக உள்ளேன்.
பிரான்ஸ், இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவு ஆழமாக வேண்டும். பன்முக தன்மையை புதுப்பிக்கவும், பாதுகாப்பான நிலையான உலகிற்காகவும் இதனை நான் எதிர்ப்பார்க்கிறேன்’ என கூறியுள்ளார்.
ஜெய்சங்கர் ஓர் ஓய்வுப்பெற்ற வெளியுறவுச் செயலர் ஆவார். இவர் நேற்று மீண்டும் வெளியுறவுத்துறைக்கு வந்துள்ளார். ஆனால், இம்முறை இந்தியாவுடனான வெளியுறவுக் கொள்கையில் புதிய உத்திகளை சேர்ப்பதன் மூலம் அனைவரையும் ஆச்சரியமூட்டும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறார் என தெரிய வந்துள்ளது.