ஜப்பானின் ஆளும் கட்சியின் புதிய தலைவராக யோஷிஹைட் சுகா தெரிவு!
ஜப்பானின் ஆளும் கட்சி, ஷின்சோ அபேவுக்குப் பின் யோஷிஹைட் சுகாவை அதன் புதிய தலைவராக தேர்ந்தெடுத்துள்ளது.
அதாவது 71 வயதான யோஷிஹைட் சுகா, நாட்டின் அடுத்த பிரதமராக வருவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
கடந்த மாதம் ஷின்சோ அபே, உடல்நலக்குறைவு காரணங்களுக்காக தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்தார்.
தற்போதைய நிர்வாகத்தில் தலைமை அமைச்சரவை செயலாளராக யோஷிஹைட் சுகா, பணியாற்றுகிறார். மேலும், அவர் வெற்றி பெறுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
அபேயின் நெருங்கிய நண்பராக கருதப்படும் யோஷிஹைட் சுகா, அவரது முன்னோடி கொள்கைகளைத் தொடர வாய்ப்புள்ளது.
கன்சர்வேடிவ் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (எல்.டி.பி) ஜனாதிபதி பதவிக்கான வாக்குகளை யோஷிஹைட் சுகா, ஒரு பெரிய வித்தியாசத்தில் வென்றார். மொத்தம் 534 வாக்குகளில் 377ஐ சட்டமியற்றுபவர்கள் மற்றும் பிராந்திய பிரதிநிதிகளிடமிருந்து பெற்றார்.
முன்னாள் வெளியுறவு அமைச்சர் புமியோ கிஷிடா மற்றும் முன்னாள் எல்.டி.பி பொதுச்செயலாளரும் ஒரு முறை பாதுகாப்பு அமைச்சருமான ஷிகெரு இஷிபா ஆகிய இருவரும் இந்த பதவிக்கு போட்டியிட்டனர்.