ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் இனவாத இராஜ்ஜியமே உருவாகி உள்ளது- மனோ
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இனவாத இராஜ்ஜியமே தற்போது உருவாகியுள்ளதென மலையக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி நான்காவது நாளாக இன்றும் (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மன்னார் பேருந்து நிலையத்திற்கு முன்னால் பேரணியில் கலந்து கொண்ட மனோ கணேசன் இவ்வாறு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழரும் முஸ்லீமும் இந்த தேசத்தில் வாழ்வதற்கான உரிமை கொண்டவர்கள். வரலாற்றில் எங்களுக்கும் பங்கு உள்ளது என்பதற்கான குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கின்றது.
தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு கோட்டாபய அரசாங்கம் இனவாத இராஜ்ஜியத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.
ஆகவேதான், இந்த அடக்குமுறைக்கு எதிராக முஸ்லிம்களும் தமிழர்களும் அணிதிரண்டு இருக்கின்றார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.