ஜனவரி 1 ஆம் திகதி முதல் Île-de-France உள்ளே பயணிக்க ‘ஒற்றை’ பயணச்சிட்டை
ஜனவரி 1 ஆம் திகதி முதல் இல் து பிரான்சுக்குள் பயணிக்க புதிய நடைமுறை ஒன்றை பிரான்ஸ் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
இதுவரை இல் து பிரான்சுக்குள் வெவ்வேறு விதங்களிலான பயணச்சிட்டைகளை பெற்றுக்கொண்டு பயணித்த நிலையில், புதிய ஆண்டில் இருந்து ‘ஒற்றை’ பயணச்சிட்டை மூலமாக அனைத்து பொது போக்குவரத்துக்களிலும் Île-de-France முழுவதும் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெற்றோக்களுக்கு என ஒரு பயணச்சிட்டையும், பேருந்துகள், ட்ராம்களுக்கு என ஒரு பயணச்சிட்டையும், Only Orlyval, Orlybus, Roissybus, Noctilien போன்ற சேவைகளுக்காக வேறு விதமான பயணச்சிட்டைகளும் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரே ஒரு பயணச்சிட்டை மூலமாக இல் து பிரான்சுக்குள் எங்குவேண்டுமானாலும், எதில் வேண்டுமானாலும் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1, 2025 ஆம் ஆண்டில் இருந்து இந்த புதிய பயணச்சிட்டை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பகிரவும்...