ஜக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம்
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேரவையின் அங்கத்தவர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புப்பட்டவர்கள் இந்த கொடூர செயலுக்கு பொறுப்பு கூறவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அங்கத்தவர்கள் இந்த சம்பவம் கொடூரமான மற்றும் கோளைத்தனமான பயங்கரவாத தாக்குதல் என் சுட்டிகாட்டியுள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி அன்று நாட்டில் பல இடங்களில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு காரணமானவர்களும் அவற்றுக்கு உதவியவர்களும் நிதி வழங்கியவர்கள் மற்றும் பயங்கரவாதத்துடனான குற்றஞ்சார்ந்த செயல்களுக்கு ஆதரவாக செயல்ப்பட்டவர்களும் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும்.
அனைத்து நாடுகளும் சர்வதேச சட்டத்துக்கு மதிப்பளித்து இது தொடர்பில் செயற்படவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான தாக்குதல்களை ஒருபோதும் அனுமதிக்கமுடியாதென்றும் ஜக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.