சோடா என நினைத்து மண்ணெண் ணையை அருந்திய 6 வயதுச் சிறுவன்
தாகத்தில் சோடா என நினைத்து மண்ணெண் ணையை அருந்திய 6 வயதுச் சிறுவன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். இந்தச் சம்பவம் நேற்றுக் கைதடியில் நடந்துள்ளது.
நேற்றுக் காலை புலம் பெயர் நாட்டில் இருந்து ஒரு குடும்பத்தினர் கைதடிக்கு வந்துள்ளனர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனே சோடா என்று நினைத்து மண்ணெண்ணையை அருந்தியுள்ளான். கடும் தாகத்தில் வந்த சிறுவன் சோடாப் போத்தலில் நிரப்பப்பட்டிருந்த மண்ணெண்ணையை சோடா என நினைத்து அருந்தியுள்ளான்.
சிறுவன் உடனடியாகச் சாவகச்சேரி மருத்துவமனைக்குச் சேர்க்கப்பட்டுள்ளான். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காகச் சிறுவன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளான் என்று தெரிவிக்கப்பட்டது.