Main Menu

கடற்படைக்காக மண்டைதீவில் காணி சுவீகரிக்க தீவிர முயற்சி

யாழ்ப்­பா­ணம், வேலணை பிர­தேச செய­லர் பிரி­வில் கடற்­படை முகாம் அமைப்­ப­தற்கு 18 ஏக்­கர் 1 நூட் 10 பேர்ச்­சஸ் அள­வு­டைய காணி கைய­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. அந்­தக் காணி நாளை அள­வீடு செய்­யப்­ப­ட­வுள்­ளது.

இது தொடர்­பான அறி­வித்­த­லும் வழங்­கப்­பட்­டுள்­ளது.
இந்­தக் காணி­கள் 11 பேருக்­குச் சொந்­த­மான காணி­க­ளா­கும். இந்­தக் காணி­களை கைய­கப்­ப­டுத்­து­வ­தற்கு ஏற்­பா­டு­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன என்று உரி­மை­யா­ளர்­கள் அச்­சம் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

அதே­வேளை கடந்த திங்­கட்­கி­ழமை யாழ்ப்­பா­ணம் மாவட்­டச் செய­லத்­தில் நடை­பெற்ற மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் காணி கைய­கப்­ப­டுத்­து­வது தொடர்­பா­கப் பேசப்­பட்­டி­ருந்­தது.

அதில் கருத்­துத் தெரி­வித்­தி­ருந்த தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், ஒருங்­கி­ணைப்­புக் குழு இணைத் தலை­ரு­மான மாவை சோ. சேனா­தி­ராசா, யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் முறை­யற்ற விதத்­தில் ஒரு துண்­டுக் காணி­யைக் கூடப் பாது­காப்­புத் தரப்­பி­னர் கைய­கப்­ப­டுத்த அனு­ம­திக்க மாட்­டோம் என்று தெரி­வித்­தி­ருந்­த­னர்.

கூட்­டத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் மற்­றொரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான சி.சிறி­த­ரன், எதிர்­வ­ரும் 11ஆம் திகதி மண்­டை­தீ­வுப் பகு­தி­யில் 11 பேருக்­குச் சொந்­த­மான காணி­க­ளைக் கடற்­ப­டை­யி­ன­ருக்கு வழங்­கு­வ­தற்­காக அள­வீடு மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது என்று சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தார்.

அதற்­குப் பதி­ல­ளித்­தி­ருந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை சோ.சேனா­ராஜா, எமக்­குத் தெரி­யாது எந்­தக் காணி­க­ளும் கைய­கப்­ப­டுத்­து­வ­தற்கு அனு­மதி இல்லை. இது தொடர்­பாக உரிய தரப்­பி­ன­ரு­டன் பேசு­கின்­றேன் என்று கூறி­யி­ருந்­தார்.
இந்­த­நி­லை­யில் காணி கைய­கப்­ப­டுத்­து­வ­தற்­கான அறி­வித்­தல் வழங்­கப்­பட்­டுள்­ள­மை­யால் காணி உரி­மை­யா­ளர்­கள் அச்­ச­மை­டைந்­துள்­ள­னர். காணி­யைக் கைய­கப்­ப­டுத்­து­வ­தற்­கான அள­வீடு தொடர்­பில் பிர­தேச செய­லர், கிராம அலு­வ­லர் ஆகி­யோ­ருக்கு அறி­வித்­தல் வழங்­கப்­பட்­டுள்­ளது.

காணி சுவீ­க­ரிப்­புச் சட்­டத்­தின் இராண்­டாம் பிரி­வின்­படி, நில அள­வை­யா­ளர் நாய­கத்­தால் வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்­தின் தொடர்­பில் இதன்­கீழ் கையொப்­பம் இட்­டி­ருக்­கும் அரச நில அள­வை­யா­ளர் கு.சுரேந்­திரா ஆகிய நான் அவ­சி­ய­மான ஆள­ணி­யி­ன­ரு­டன், வட மாகா­ணம் யாழ்ப்­பா­ணம் மாவட்­டத்­தில் உள்ள வேல­ணைப் பிர­தேச செய­லர் பிரி­வில் உள்ள 18 ஏக்­கர் 1 நூட் 10 பேர்ச்­சஸ் விஸ்­தீ­ர­ணம் உடைய காணி­யில் கடற்­படை முகாம் அமைப்­ப­தற்­கா­கக் காணி சுவீ­க­ரிப்­ப­தற்­கான அள­வீடு செய்­வ­தற்­காக 2019ஆம் ஆண்டு 04ஆம் மாதம் 11ஆம் திகதி 9 மணி­ய­ள­வி­லும் தொடர்ந்து வரும் நாள்­க­ளி­லும் அந்­தக் காணி­க­ளுக்­குப் பிர­வே­சிப்­ப­தற்­குத் தீர்­மா­னித்­துள்­ளேன் என்று தங்­க­ளுக்கு அறி­யத் தரு­கின்­றேன் என்று அந்த அறி­வித்­த­லில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

பகிரவும்...