Main Menu

சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி ஜெ.அன்பழகனின் உடல் அடக்கம்

கொரொனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் உடல் கண்ணம்மாபேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அவரது தந்தை அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே ஜெ.அன்பழகனின் உடலும் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி கவச உடை அணிந்தவர்களால் அடக்கம் செய்யப்பட்டது.

கொரோனா பாதிப்பால் அன்பழகன் உடலுக்கு தொண்டர்கள் அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், கண்ணம்மாபேட்டை மயானத்திற்கு வெளியே தி.மு.க. தொண்டர்கள் குழுமியுள்ளனர்.

ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, கடந்த 2ஆம் திகதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து அவருக்கு ‘வென்டிலேட்டர்’ வாயிலாக ஆக்சிஜன் அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, இன்று (புதன்கிழமை) காலை 8.05 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.