Main Menu

சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

தமிழ் தேசியக் கட்சியின் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறையில் தனது வீட்டிலிருந்த அவருக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டது.

இந்நிலையில், நோயாளர் காவுவண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்ட அவர், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பகிரவும்...