சிந்தனை இல்லாதவர்களிடம் ஆட்சி அதிகாரம் சிக்கிக் கொண்டுள்ளது – சீமான்
எதைக் கொடுத்தால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்ற சிந்தனையே இல்லாதவர்களிடத்தில் 50 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரம் சிக்கிக்கொண்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
போடி வள்ளுவர் சிலைக்கு அருகில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ இந்த ஆட்சியாளர்களுக்கு தமிழ்மொழி குறித்தோ, தமிழர்களின் வரலாறு குறித்தோ, பண்டபாடு குறித்தோ கவலை இல்லை.
அவர்களுக்கு இருக்கும் ஒரே நோக்கம் அரசியலுக்கு வருவது, பணம் சம்பாதிப்பது, பணத்தை பதுக்கி வைப்பது, மீண்டும் தேர்தல் வரும்போது வாக்குக்கு காசு கொடுப்பது மட்டுமே.
நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ அதிமுக, திமுகவிடம் இருந்து விடுதலை பெற வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.