Day: March 22, 2021
இஸ்ரேல் பாராளுமன்ற தேர்தல் – பெஞ்சமின் நேதன்யாகு மீண்டும் பிரதமர் ஆவாரா?
இஸ்ரேல் நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் நான்காவது முறையாக மீண்டும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இஸ்ரேலில் கடந்த 12 ஆண்டுகளாக பிரதமராக இருந்து வருபவர் பெஞ்சமின் நேதன்யாகு. அங்கு கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.மேலும் படிக்க...
தமிழகத்தில் 6.29 கோடி வாக்காளர்கள்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 7,255 வேட்புமனுக்களில் 4,512 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. 2,743 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 14 நாட்களே இருக்கும் நிலையில் தேர்தலை நடத்த தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில்மேலும் படிக்க...
தேர்தல் பிரசாரத்தின் போது முககவசம் அவசியம் – வேட்பாளர்களுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொள்ளும் அனைவரும் முக கவசம் அணிவதையும், தனி நபர் விலகலையும் பின்பற்றுவதை அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் உறுதி செய்ய வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரங்களுக்கு தடைமேலும் படிக்க...
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பாதுகாப்பானது என அமெரிக்காவின் சோதனையில் உறுதி
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி 79 வீதம் செயற்திறன் மிக்கது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, சிலி மற்றும் பெரு ஆகிய நாடுகளை சேர்ந்த 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன்,மேலும் படிக்க...
ஐ.நா. விவகாரத்தில் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை விடயத்தை இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்றமேலும் படிக்க...
பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் கைக்கூலிகள் முயற்சி – சுமந்திரன் குற்றச்சாட்டு
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள ஐ.நா. பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் கைக்கூலிகள் செயற்பட்டு வருவதாக நாடளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டினார். வவுனியாவிற்கு இன்று (திங்கட்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் களமேலும் படிக்க...
சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்
சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க அரசாங்கம் தேவையான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தும் என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், குறித்த புதிய விதிமுறைகள் புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பிலும் சேர்க்கப்படும்மேலும் படிக்க...
10வது ஆண்டு நினைவு தினம் – அமரர் திருமதி.நேசம்மா சின்னத்தம்பி
தாயகத்தில் வண்ணார் பண்ணையை சேர்ந்த பிரான்ஸை வதிவிடமாக கொண்டிருந்த அமரர் திருமதி.நேசம்மா சின்னத்தம்பி அவர்களின் 10வது ஆண்டு நினைவு தினம் 22ம் திகதி மார்ச் மாதம் திங்கட்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இன்று 10வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்படும் திருமதி நேசம்மா சின்னத்தம்பிமேலும் படிக்க...
ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு குறைவடைந்து வருகின்றது – வானிலை ஆய்வாளர்கள்
ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்காவிக் அருகே ஏற்பட்ட எரிமலை வெடிப்பு தற்போது குறைந்து வருவதாக நில அதிர்வு கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக குறுகிய காலத்தில் குறிப்பாக கடந்த பல வாரங்களாக 50,000 க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
உலகின் வலிமையான இராணுவமாக சீனா: அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா!
உலகின் வலிமையான இராணுவமாக சீனாவின் இராணுவம் உள்ளதாக பாதுகாப்பு வலைத்தளமான மிலிட்ரி டைரக்ட் (Military Direct) தெரிவித்துள்ளது. குறித்த வலைத்தளத்தின் ஆய்வு அறிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் ரஷ்யா மூன்றாவது இடத்திலும் இராணுவ வலிமையைக் கொண்டுள்ளதாகமேலும் படிக்க...
சிந்தனை இல்லாதவர்களிடம் ஆட்சி அதிகாரம் சிக்கிக் கொண்டுள்ளது – சீமான்
எதைக் கொடுத்தால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்ற சிந்தனையே இல்லாதவர்களிடத்தில் 50 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரம் சிக்கிக்கொண்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். போடி வள்ளுவர் சிலைக்கு அருகில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்துமேலும் படிக்க...
தமிழகம் எல்லாத் துறையிலும் பின்தங்கி உள்ளது – மு.க.ஸ்டாலின்
தமிழகம் எல்லாத் துறையிலும் பின்தங்கி இருப்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அம்பத்தூரில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர் சென்னை எப்போதும் தி.மு.கவின் கோட்டை எனவும், தமிழகம் எல்லாத்மேலும் படிக்க...
இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு ஒத்திவைப்பு?
ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த விவாதம் இன்று இடம்பெறவுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டது.மேலும் படிக்க...
மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடாது
அமெரிக்காவுடனான மிலேனியம் சவால்கள் (எம்.சி.சி.) ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடாது என சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். எம்.சி.சி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை தடுக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த அறிவிப்புமேலும் படிக்க...
ஜனாதிபதியின் அண்மைய கருத்து ஊடகங்களைப் பயப்படுத்துவதற்கே- சுமந்திரன் சுட்டிக்காட்டு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் ஊடகங்கள் தொடர்பாகத் தெரிவித்திருந்த கருத்து ஊடகங்களைப் பயப்படுத்தும் நோக்கமாகவே உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக யாழில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவிக்கையில், “ஒருசிலமேலும் படிக்க...