Main Menu

சிங்­கள பெளத்த அரசு உரு­வானால் சிறு­பான்மை மக்­களை பாதிக்கும்: ஜே.வி.பி.

சிங்­கள பெளத்த அர­சாங்கம் ஒன்­றினை அமைக்கும் நோக்­கத்தில் ராஜபக் ஷக்கள் செயற்­பட்டால் தமிழ் முஸ்லிம்  மக்­க­ளுக்கே அதிக தாக்­கத்தை செலுத்தும். ஜனா­தி­பதி கோத்­த­பாய தான் சிங்­கள பெளத்த வாக்­கு­களில் வெற்றி பெற்­றவன் என்ற அடை­யா­ளத்தை காட்டி சிறு­பான்மை மக்­களை அச்­சப்­ப­டுத்­தி­யுள்ளார். இந்த அர­சாங்­கத்தின் நோக்­கங்கள் தவ­றா­னவை  என்­பதை மக்கள் இன்­னமும் உண­ர­வில்லை என்று மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­துள்­ளது. 

பொதுத் தேர்­தலில் பல­மான எதிர்க்­கட்­சி­யாக உரு­வா­கவே முயற்­சிக்­கின்றோம் எனவும் ஜே.வி.பியின்  பொதுச் செய­லாளர் ரில்வின் சில்வா  குறிப்­பிட்டார்.

ஜனா­தி­பதி தேர்­தலின் பின்­ன­ராக அர­சாங்கம் தற்­போது முன்­னெ­டுத்து வரு­கின்ற நகர்­வுகள் குறித்தும் பொதுத் தேர்­தலில் மக்கள் விடு­தலை முன்­னணி எவ்­வாறு செயற்­படும் என்ற கார­ணிகள் குறித்தும் கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

அவர் மேலும்  குறிப்­பி­டு­கையில் 

ஜனா­தி­பதித் தேர்­தலில் தேசிய மக்கள் சக்தி எதிர்­பார்த்த அள­விற்கு மக்­களின்  ஆத­ரவு கிடைக்­க­வில்லை. இதற்கு சில கார­ணிகள் உள்­ளன. பிர­தான இரண்டு வேட்­பா­ளர்கள் குறித்து அதிக கவனம் செலுத்­தப்­ப­டு­கின்ற நிலையில் மூன்றாம் நப­ருக்கு மக்கள் ஆத­ரவு கிடைப்­பது கடி­ன­மான ஒன்­றாகும். அதேபோல் ஊட­கங்­களும் பிர­தான இரு வேட்­பா­ளர்கள் குறித்து மட்­டுமே கவனம் செலுத்­தின. எவ்­வாறு இருப்­பினும் தேர்­தலில் மக்கள் ஒரு ஆணையை கொடுத்­துள்­ளனர். அதற்கு அனை­வரும் கட்­டுப்­பட்­டாக வேண்டும். அடுத்த மூன்று மாதங்­களில் பொதுத் தேர்தல் ஒன்று இடம்­பெறும். இதில் ராஜபக் ஷ அர­சாங்கம் சகல விதத்­திலும் அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி ஐக்­கிய தேசிய கட்­சியின் அரை­வாசி பேரை­யா­வது விலை­கொ­டுத்து வாங்கி தமது அர­சாங்­கத்தை அமைக்க முயற்­சிப்­பார்கள். ஆகவே பல­மான எதிர்க்­கட்சி யார் என்­பதே கேள்­வி­யாக அமையும். ஐக்­கிய தேசிய கட்­சி­யினால் பல­மான எதிர்­கட்­சி­யாக செயற்­பட முடி­யுமா என்ற கேள்வி எழும். ஆகவே தேசிய மக்கள் சக்தி பொதுத் தேர்­தலில் மக்­களின் ஆத­ரவை பெற்ற கட்­சி­யாக அடை­யா­ள­ப­டுத்த சகல நட­வ­டிக்­கை­க­ளையும் நாம் முன்­னெ­டுப்போம். 

மூன்று மாத­கால இடை­கால அர­சாங்­கத்தில் அமைச்­சர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­ட­வர்கள் யார் என்று பார்த்தால் இந்த அர­சாங்கம் எப்­ப­டிப்­பட்­டது என்­பதை தெரிந்­து­கொள்ள முடியும். கடந்த காலங்­களில் ஊழல் வாதிகள், பாரா­ளு­மன்­றத்தில் அரா­ஜ­க­மாக செயற்­பட்­ட­வர்கள், பல குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ள­வர்கள், வழக்­குகள் உள்­ள­வர்­களை ஜனா­தி­பதி அமைச்­சர்­க­ளாக நிய­மித்­துள்ளார். இவர்­களை கொண்டு ஊழ­லில்லா அர­சாங்கம் ஒன்று உரு­வாக்­கப்­ப­டுமா என்ற கேள்வி எழு­கின்­றது. 

மறு­புறம் இன­வாத மத­வாத அமைப்­புக்கள் அனைத்­துமே இன்று அமை­தி­யா­கி­யுள்­ளன. ஆகவே இவர்கள் அனை­வரும் யாரு­டைய தேவைக்­காக செயற்­பட்­டனர் என்­பதும் தெளி­வா­கி­யுள்­ளது. எனவே மக்கள் இப்­போ­தா­வது உண்­மை­களை உணர வேண்­டிய கட்­டாயம் உள்­ளது. ஆனால் மக்கள் இன்றும் அவற்றை அறிந்­து­கொள்ள தயா­ரில்­லாத நிலையில் உள்­ளனர். 

ஜனா­தி­பதி தனது பத­விப்­பி­ர­மாண நிகழ்வின் போதே தான் சிங்­கள பெளத்த வாக்­கு­களில் வெற்றி பெற்­றவன் என்ற அடை­யா­ளத்தை காட்டி சிறு­பான்மை மக்­களை அச்­சப்­ப­டுத்­தி­யுள்ளார். இவர்­களின் அர­சாங்­கத்­தையும்  பெளத்த சிங்­க­ள­வாத அர­சாங்­க­மாக அமைக்­கவே முயற்­சி­களை எடுப்­பார்கள் என்­பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆகவே தமிழ் முஸ்லிம் மக்களை புறக்கணித்த அரசாங்கம் உருவாகினால் அதில் அதிக பாதிப்பு சிறுபான்மை மக்களையே சென்றடையும். அதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக நாம் கருதுகின்றோம். எனவே எதிர்க்கட்சியாக நாம் பலமடையவே சகல மக்களையும் சந்தித்து எமக்கான ஆதரவை கேட்போம்  என்றார். 

பகிரவும்...