சிகிரியாவைப் பார்வையிட 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை
சிகிரியாவை பார்வையிடுவதற்காக நேற்றுமுன்தினம் மாத்திரம் சுமார் 20 ஆயிரம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
கடந்த ஆண்டு பொசொன் தினத்துடன் ஒப்பிடும்போது இம்முறை சீகிரியாவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 ஆயிரத் 300 ஆக அதிகரித்துள்ளது என சிகிரியாவின் திட்டப் பணிப்பாளர் மேஜர் அனுர நிசாந்த தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் சிகிரியாவை பார்வையிட வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டிருந்த நிலையில் தற்சமயம் அது பெரும்பாலும் இயல்பு நிலைக்கு திரும்பியிருப்பதாக திட்டப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் சுமார் நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 500 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.