சமூக இணையத்தளங்கள் மீதான தடை நீக்கம்
உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று பாரிய சம்பவத்துடன் இதுவரையில் சமூக இணையத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் நீக்கப்படுகிறது.
இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த தடையை உடனடியாக நீக்குவதற்கு அதிமேதகு ஜனாதிபதியினால் தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தடையை நீக்கி நாட்டில் நிலவும் நிலைமைக்கு அமைவாக சமூக ஊடகங்களை பயன்படுத்தும் பொழுது பொறுப்புடன் செயற்படுமாறும் அரசாங்கம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.