சபரிமலை ஐயப்பன் ஆலய பூஜைகளில் பங்கேற்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி
சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் இடம்பெறவுள்ள ஆடி மாத பூஜையில் பங்கேற்பதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் இணையத்தின் ஊடான முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளமையினால் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
மேலும் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளன. இந்நிலையிலேயே சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் பக்தர்களை அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஆலோசனை கூட்டமொன்றினை நடத்தி இருந்தது.
குறித்த கூட்டத்திலேயே ஆடி மாத பூஜையில் பங்கேற்பதற்கு பக்தர்களை அனுமதிக்கலாம் என்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.